சித்தர்கள் யார் ? – பதினெண் சித்தர்கள்

சித்தர்கள் யார் ?

இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

அனாதிக்காலத்தில் கால வேகத்தாலும், கருத்து வள்ர்ச்சியாலும், வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப வெவ்வேறு வழிபாட்டு முறைகள் உருவாக்கபட்டன. இவ்வழிபாட்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, குருவின் வழிகாட்டுதலின் படி பயிற்சி முயற்சி செய்து பத்தி, சத்தி, சித்தி நிலைகளைப் பெற்று இவர்கள் தங்களைச் சித்தர் நிலைக்கு உயர்த்திக்கொண்டனர். சித்தர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து சித்தி முத்தி பெற்ற வழிபடு முறையின்படி, நாற்பத்தெட்டு (48) வகைப்படுத்தப் படுகிறார்கள்.

குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:

நவகோடி சித்தர்கள்
நவநாத சித்தர்கள்
நாத சித்தர்கள்
நாதாந்த சித்தர்கள்
வேத சித்தர்கள்
வேதாந்த சித்தர்கள்
சித்த சித்தர்கள்
சித்தாந்த சித்தர்கள்
தவ சித்தர்கள்
வேள்விச் சித்தர்கள்
ஞான சித்தர்கள்
மறைச் சித்தர்கள்
முறைச் சித்தர்கள்
நெறிச் சித்தர்கள்
மந்திறச் சித்தர்கள்
எந்திறச் சித்தர்கள்
மந்தரச் சித்தர்கள்
மாந்தரச் சித்தர்கள்
மாந்தரீகச் சித்தர்கள்
தந்தரச் சித்தர்கள்
தாந்தரச் சித்தர்கள்
தாந்தரீகச் சித்தர்கள்
நான்மறைச் சித்தர்கள்
நான்முறைச் சித்தர்கள்
நானெறிச் சித்தர்கள்
நான்வேதச் சித்தர்கள்
பத்த சித்தர்கள்
பத்தாந்த சித்தர்கள்
போத்த சித்தர்கள்
போத்தாந்த சித்தர்கள்
புத்த சித்தர்கள்
புத்தாந்த சித்தர்கள்
முத்த சித்தர்கள்
முத்தாந்த சித்தர்கள்
சீவன்முத்த சித்தர்கள்
சீவன்முத்தாந்த சித்தர்கள்
அருவ சித்தர்கள்
அருவுருவ சித்தர்கள்
உருவ சித்தர்கள்
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள்ஏழு வகைப்படுவர்.
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”, “எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”, “விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்” — என்று பல குறிப்புகள் உள்ளன.
பதினெட்டாம்படிக் கருப்புகள்
பதினெண் சித்தர்கள்

இந்த நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களில் நாற்பதெட்டாவது நிலையில் உள்ளவர்களே பதினெண் சித்தர்கள்.

சித்தர்கள், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். பலகாலம் இடைவிடாது பூசை, தவம், வேள்வி என யோகமார்க்கத்தில் ஈடுபட்டு இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர். அட்டமா சித்துக்களும் கைவரப்பெற்றவர்கள் ஆனால் சித்துக்களை அத்தவர்களே சித்தர்கள். அதாவது சித்துக்களைக் கடந்தவர்களே சித்தர்கள். சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை.

சித்தர்கள், இயற்கையோடு இனைந்த தற்சாற்பு வாழ்வியல் நெறியினை பின்பற்றியவர்கள். தமது தேவைகள் அனைத்தையும், தான் வாழும் சூழலில் இருந்தே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையும், ஞானமும் கொண்டவர்கள். தங்களின் கண்டுபிடிப்புகளும் வழிமுறைகளும் எப்போதும் நல்லவற்றுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயன் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பவர்கள். சித்தர்கள் சாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் இன்றி சம நோக்குப் பார்வையுடையவர்கள்.


Join Our Newsletter

Sign up to receive timely, useful information in your inbox.

Powered By Indic IME