தெய்வீக நிலை அடைதல் – பதினெண் சித்தர்கள்

தெய்வீக நிலை அடைதல்

மனித வாழ்வு

மனிதன் பிறக்கிறான், மனைவி மக்களை ஏற்கிறான், தன் சூழலில் வாழ்கிறான், இறக்கிறான். இவ்வுலகில் தமது எண்ணப்போக்கில், ‘1. தனிமனித வாழ்வு 2. குடும்ப வாழ்வு 3. சமுதாய வாழ்வு 4. அரசியல் வாழ்வு எனும் நான்கு வாழ்க்கை நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து சென்றிடுகின்றார்கள். இவர்கள் இந்த பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளியில் ஏற்படுவத்திக் கொள்வதுதான் உறவு முறை.

ஏழு தலை முறை

காலம் காலமாக இந்த உறவு முறை இருந்து வந்த போதிலும் தமக்கு முந்திய ஏழு தலை முறையினரே சிறப்பாகக் கருதப்படுகிறார்கள்.
1. இன்றைய தந்தை, தந்தையால் உருவாக்கப்பட்டிட்ட தாய், உடன் பிறந்தவர்கள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – முதல் தலைமுறை
2. இந்த அப்பாவின் அப்பா, அதாவது தாத்தா தாத்தாவால் உருவாக்கப்பட்டிட்ட தாத்தாவின் மனைவி, தாத்தாவின் பிள்ளைகள் – இரண்டாம் தலைமுறை
3. இந்த தாத்தாவின் அப்பா (அதாவது பாட்டன்), பாட்டனால் உருவாக்கப்பட்டிட்ட பாட்டனின் மனைவி, பாட்டனின் பிள்ளைகள் – மூன்றாம்தலைமுறை
4. இந்த பாட்டனின் அப்பா (அதாவது பூட்டன்), பூட்டனால் உருவாக்கப்பட்டிட்ட பூட்டனின் மனைவி, பூட்டனின் மனைவி, பூட்டனின் பிள்ளைகள் – நான்காம் தலைமுறை
5. இந்த பூட்டனின் அப்பா (அதாவது ஓட்டன்), ஓட்டனால் உருவாக்கப்பட்டிட்ட ஓட்டனின் மனைவி, ஓட்டனின் பிள்ளைகள் – ஐந்தாம் தலைமுறை
6. இந்த ஓட்டனின் அப்பா (அதாவது சேட்டன்), சேட்டனால் உருவாக்கப்பட்டிட்ட சேட்டனின் மனைவி, சேட்டனின் பிள்ளைகள் – ஆறாம் தலைமுறை
7. இந்த சேட்டனின் அப்பா (அதாவது சிய்யான்), சிய்யானால் உருவாக்கப்பட்டிட்ட சிய்யானின் மனைவி, சிய்யானின் பிள்ளைகள் – ஏழாம் தலைமுறை

குடும்ப ஆண்டவர், குல தெய்வம், கிராம தேவர் தேவதை, நாட்டுக்கடவுளர்

மானுடரில் எல்லோரையும் போல், கூட்டத்தோடு கூட்டமாக மேயச்சென்று திரும்புகின்ற ஆடுகளைப்போல், பிறந்து இறக்கின்ற மனிதர்களுக்கிடையில் மிகுந்த தன்னம்பிக்கையாலும் பேரார்வத்தாலும் மற்ற மானுடர்களிலிருந்து மாறுபட்டு வேறுபட்டு அரிய பெரிய முயற்சிகளை மேற்கொண்டு அசுரபத்தியால், அசுர சத்தி, சித்தி, முத்திகளை பெறுகிறவர்கள் தோன்றிடுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட குடும்பத்தின் ஆண்டவர்களாக மட்டும் இல்லாமல், அக்குடும்பத்தார்களை சேர்ந்த அனைவர்க்கும் குல தெய்வங்களாக மாறுவார்கள். அம்மட்டின்றி அக்குலத்தார்கள் மிகுதியாக வாழுகின்ற கிராமத்துக்கு அக்கிராம தேவர் தேவதைகளாக மாறுவார்கள். அக்கிராமத்தாரைச் சேர்ந்தவர்கள் பலகிராமங்களிலும் குடியேறி செல்வாக்குப் பெறும்போது கிராம தேவர்தேவதைகளாகிய மாறிய குடும்ப ஆண்டவர்களே நாட்டுக் கடவுளர்களாக மாறிடுவார்கள்.

இல்லற வாழ்வை முறையாக வாழ்ந்து,நிறைவடைகிறவர்கள் ஆண்டவர் களாகிறார்கள், இவர்களே தெய்வங்களாகவும், தேவர் தேவதைகளாகவும், நாட்டுக்கடவுளர்களாகவும் மாறுகிறார்கள்.

ஒரு மனிதனுடைய உடன்பிறந்த 1.தம்பிகள், தங்ககைகள் 2.அண்ணன்கள், அக்காக்கள் 3.அப்பா, அம்மா 4. அப்பாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 5.அம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று வாழ்க்கையில் கிடைக்கின்ற ஐந்து வகைபட்ட சொந்தங்களில் யார் மாண்டு (இறந்து), எல்லோரின் நினைவிலும் பசுமையாக வேரூன்றுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் ஆண்டவர்களே. மனிதனே கடவுளாகிறான் என்ற சித்தர் நெறித்தத்துவத்தையே மெய்ப்பிக்கிறது.

அருளுலகிலுள்ள ஆண்டவர், தெய்வம், தேவர் தேவதை, கடவுளர்களுக்கு மனிதர்களைப் போலவே விருப்பு, வெறுப்புகள் உண்டு. அன்புடன் ஆதரிப்பதும் நீதியுணர்வோடு கண்டிப்பதும், தண்டிப்பதும் உண்டு. மனித வாழ்வில் இருக்கின்ற எல்லாவகையான பழக்கவழக்கங்களும் உலகியல் நடைமுறைகளும் அருளுலக நால்வர்க்கும் உண்டு.


Join Our Newsletter

Sign up to receive timely, useful information in your inbox.

Powered By Indic IME